வெள்ளத்தில் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு புதிய பாஸ்போர்ட் இலவசம் : சுஷ்மா ஸ்வராஜ்

 
தமிழகத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது தொலைந்து போன பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக மத்திய அரசு இலவசமாக புதிய பாஸ்போர்ட்டுகளை வழங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரது ட்விட்டர் கணக்கு பதிவில் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் வரலாறு காணாத தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி மக்கள் குடும்ப அட்டை , பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் வெள்ளத்தால் உங்களின் பாஸ்போர்ட் சேதம் அடைந்திருந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ சென்னையில் உள்ள 3 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களுக்கு தயவு செய்து செல்லுங்கள். அங்கு உங்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட் அளிக்கப்படும்.”என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.