சென்னை: மீனவர்களுக்கு எதிரான மீனாகுமாரி ஆணையத்தின் பரிந்துரைகளை பாஜக அரசு நிராகரிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: உள்நாட்டு மீனவர்கள் 12 நாட்டிக்கல் தொலைவுக்குள்தான் மீன் பிடிக்க வேண்டும் என்றும், அதற்கு அப்பால் வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கலாம் என்றும் மீனாகுமாரி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை பாஜக அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் தூத்தூர் பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுறா ஏற்றுமதிக்கு அண்டை நாடுகளில் தடை இல்லாதபோது, இந்தியாவில் மட்டும் பாஜக அரசு தடைவிதித்துள்ளது. இது மீனவர்களின் வர்த்தகத்தையும், வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும். பாஜக ஆட்சியில் மீனவர்களை நசுக்க இதுபோன்ற சட்டங்களையும் கொண்டு வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில்கூட சுறா உள்பட 56 வகை மீன்களைப் பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. பிறகு, மீனவர்களின் தொடர் போராட்டத்தால் அது கைவிடப்பட்டது. இந்த முறை அதுபோல் இல்லாமல், மீனவர்கள் நலன் கருதி மீனாகுமாரி கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை பாஜக அரசு நிராகரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மீனவர்க்கு எதிரான மீனாகுமாரி ஆணைய பரிந்துரைகளை பாஜக அரசு நிராகரிக்க ஜி.கே.வாசன் வேண்டுகோள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari