சென்னை: தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பேரணி நடத்தப் போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது…
ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட வரலாற்று பிழைகளுக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்டதற்கான உதாரணங்கள் பல. அந்த வகையில் வேளாண் குடிகளான தேவேந்திர குல வேளாளர்களை SC பட்டியலில் சேர்த்து இழைக்கப்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்கக் கோரி பிரிட்டன் தூதரகம் நோக்கி நவ.15ல் தேவேந்திரர்கள் பேரணி நடத்தப் படும்.
பிரிட்டிஷ் தூதரகம் நோக்கி பேரணி – நவ 15 சென்னையில். ஆங்கிலேயர் காலத்தில் தேவேந்திர குல வேளாளர்களை தவறுதலாக SC பட்டியலில் சேர்த்ததற்காக மன்னிப்பு கேட்கக் கோரியும், இழைக்கப்பட்ட தவறை நிவர்த்தி செய்யும் பொருட்டும், இந்தியா அரசுக்கு பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை பரிந்துரைக்கக் கோரி பேரணி… என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் தூதரகம் நோக்கி பேரணி – நவ 15 சென்னை
ஆங்கிலேயர் காலத்தில் தேவேந்திர குல வேளாளர்களை தவருதலாக SC பட்டியலில் சேர்த்ததற்காக மன்னிப்பு கேட்க கோரியும், இழைக்கபட்ட தவரை நிவர்த்திசெய்யும் பொருட்டு, இந்தியா அரசுக்கு பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை பரிந்துரைக்க கோரி பேரணி pic.twitter.com/A6NPFnzWYU
— Dr K Krishnasamy (@DrKrishnasamy) October 23, 2018




