பழைய நீராவி எஞ்சினை பார்த்து ரசிக்க வாய்ப்பு!

Published:

train engine - 2026

ஸ்ரீவைகுண்டம் : 1855 ஆம் உருவாக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயில் வண்டி ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் வந்துள்ளது. அதனை பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் ரயில்கள் அறிமுகம் செய்யப் பட்ட புதிதில், பழைமையான நீராவி எஞ்சின்களைக் கொண்டே ரயில்கள் இயக்கப் பட்டன. நிலக்கரி மூலம் இயங்கும் அந்த இஞ்சின்களில் வரும் சத்தம் குழந்தைகளைப் பெரிந்தும் கவர்ந்திருந்தது. ரயில் வண்டி என்றாலே கூ சிக்கு புக்கு சிக்கு புக்கு என்று பாட்டுப் பாடி குழந்தைகள் விளையாடி மகிழ்வது, இந்த நீராவி இஞ்சினின் சத்தத்தாலேதான்!

அந்த நீராவி எஞ்சின்கள் எப்படி இயங்கின என்பது குறித்தும் இந்த இஞ்சினை வந்து பார்வையிடும் இன்றைய தலைமுறை சிறுவர்கள், குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிட்சன், தாம்சன், ஹெவிட்சன் ஆகியோர் 1855-இல் உருவாக்கிய நீராவி இரயில் எஞ்சின் இந்தியாவிற்கு வழங்கப்பட்டு நீராவி தொடர்வண்டி இங்கு 55 ஆண்டுகள் தனது பணியை ஆற்றியது. இந்த தொடர் வண்டியில்தான் எலிசபெத் மகாராணி பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீராவி தொடர் வண்டியில் இந்திய மக்களும் பயணம் செய்தனர். 1909-ஆம் ஆண்டு இந்த இந்த நீராவி எஞ்சின் தனது சேவையை நிறுத்தி ஜமால்பூர் மற்றும் ஹெளராவில் உள்ள பனிமனைக்கு அனுப்பப்பட்டு கண்காட்சிப் பொருளானது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

101 ஆண்டுகளுக்கு பின்னர் இயற்கை அழிவினாலும், அதிக அளவு சிதிலமடைந்ததினாலும் தனதுதகுதியை இந்த நீராவிஎஞ்சின் இழந்தது. பின்னர் இந்த நீராவி எஞ்சின் 2010-ஆம் ஆண்டு சென்னைக்குஅருகிலுள்ள பெரம்பூர் பனிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அழகு தேவதைக்கு உலகிலேயே பழமையான நீராவி எஞ்சின் என்ற சாதனை பெயர் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல கின்னஸ் சாதனையும் இந்த நீராவி எஞ்சின் பெற்றுள்ளது. இந்த சாதனை இயந்திரத்தின் மீள் ஓட்டம் 2010 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரலுக்கும்-ஆவடிக்கும் இடையே இயக்கப்பட்டது.

அதன் பின்னர் புதுச்சேரியிலும் இயக்கப்பட்டது.தற்போது தென் பாண்டிசீமையிலுள்ள மக்களுக்கு விருந்து படைக்க திருச்செந்தூர் முதல் ஸ்ரீவைகுண்டம் வரை 33 கி.மீ.தொலைவுக்கு தன்னுடைய பாரம்பரிய மகிமையை காட்டவருகிறது. அதன் வெள்ளோட்டமாகத்தான் இன்று (09.11.2018) மதியம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  இதனை இரயில் பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். எந்தெந்த நாள்களில் எந்தெந்த நேரங்களில் இயக்கப்படும்  என்பதை தென்னக ரயில்வே நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img