கார்த்திகை முதல் சோமவாரம்: குற்றாலம் அருவியில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி; வழிபாடு!

courtallam temple somavara - 2026

குற்றாலம்: இன்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு, திருக்குற்றாலம் அருவியில் நீராடி பூஜை செய்வதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதை முன்னிட்டு, குற்றாலம் மெயின் அருவியில் அதிகாலை முதல் காலை 9 மணி வரை பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கார்த்திகை மாதம் முதல் சோம விரதத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலை முதலே குற்றால அருவிகளில் புனித நீராடி குற்றாலநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிப்பாடு.நடத்தி வருகின்றனர். அருவியில் நீராடி, அரச மரம் சுற்றி வந்து நாக வழிபாடும் சோமநாதர் வழிபாடும் செய்வது தொன்றுதொட்டு கடைபிடிக்கப் பட்டு வரும் மரபு. இதை முன்னிட்டு, கார்த்திகை சோம வாரமான திங்கள் கிழமைகளில், அருவிகளில் அதிகாலை முதல் 9 மணி வரை பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப் படுவர்.

குற்றாலத்தில் கார்த்திகை மாத திங்கள் கிழமை முதல் சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் அருவியில் புனித நீராடி சுமங்கலி பூஜை நடத்தினர். கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவார சுமங்கலி பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சோமவாரத்தில் கணவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டி பெண்கள் அதிகாலை வேளையில் புனித நீராடி அருகில் உள்ள கோயில்களில் திருமாங்கல்ய பூஜை செய்வது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கள் கிழமையான நேற்று குற்றாலம் மெயினருவியில் அதிகாலை 2 மணி முதலே ஆயிரக்கணக்கான பெண்கள் புனித நீராடி, அருவிக்கரையிலுள்ள கன்னி விநாயகர் கோயில் மற்றும் செண்பக விநாயகர் கோயிலை 11 முறை சுற்றி வந்து பிரகாரத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பழம், மஞ்சள் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

அதிகாலை1மணிக்கு மேல் காலை 9 மணி வரை பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தததால் ஆண்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு ஆண்கள் பகுதியிலேயே பெண்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 9 மணிக்கு மேல் ஆண்கள் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே போல காலை 10.30 மணிக்கு மேல் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மீண்டும் ஆண்கள் பகுதியில் பெண்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த சில தினங்களாக அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்து வருகிறது. அருவிகளிலும் தண்ணீர் வரத்து சிறக்க இருப்பதால் இதனால் ஐயப்ப பக்தர்களும், சோமவாரத்திற்கு வந்த பெண்களும் மகிழ்ச்சியடைந்தனர்.காலை முதலே ஏராளமான போலீசார் குற்றாலநாதர் ஆலயம்,குற்றாலம் மெயினருவி,உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories