ரூ. 195.43 கோடி இதுவரை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரவு

 
 
தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 195.43 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
நிவாரண நிதிக்கு குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
கடந்த மாதம் சென்னையை தாக்கிய கடும் வெள்ளம் காரணமாக,பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து நிர்க்கதிக்கு ஆளானார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பல லட்சம் ரூபாய் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நேற்று மட்டும் 25.76 கோடி ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள்பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வெள்ள நிவாரண நிதிக்காக முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களவை துணைத் தலைவர் டாக்டர் எம். தம்பிதுரை, அனைத்திந் திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவைத் குழுத் தலைவர் ஏ. நவநீத கிருஷ்ணன் ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர் .
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் ப. தனபால் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சரும், அவை முன்னவருமான ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் அவர்கள், அரசு தலைமைக் கொறடா ஆர். மனோகரன் ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், மாண்புமிகு அமைச்சர்கள், பேரவைத் தலைவர், பேரவை முன்னவர், பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோரின் ஒரு மாத சம்பளத் தொகையான 75 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளனர் . .
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்கு நர் என். சந்திரசேகரன் 10 கோடி ரூபாய். அப்பல்லோ மருத் துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி 3 கோடி ரூபாய். 5.சுந்தரம் பாஸ்ட் னர்ஸ் லிமிடெட் நிறுவனத் தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர் . .
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பி. அசோக், நிறுவன மேலாண்மை இயக்குநர் கௌதம் ராய், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் யு.வி. மன்னூர், சிபிசிஎல் நிறுவனத்தின் இயக்குநர் (நிதி) எஸ். கிருஷ்ண பிரசாத் ஆகியோர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 3 கோடி ரூபாய், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 44 லட்சத்து 32 ஆயிரத்து 486 ரூபாய் வழங்கியுள்ளனர் . ,
சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பில் 1 கோடி ரூபாய், சிபிசிஎல் நிறுவன பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 32 லட்சத்து 72 ஆயிரத்து 560 ரூபாய், என இதுவரை வழங்கப்பட்ட தொகை 195 கோடியே 43 லட்சத்து 61 ஆயிரத்து 563 ரூபாயாகும் என்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.