தமிழகத்தில் 1,100 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

 
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டில், 1,100 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்டம் முழுவதும் 297 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் வழக்கத்தை விட அதிகமான அளவு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, புத்தாண்டு தினத்துக்கு முந்தைய நாளான வியாழக்கிழமை பிற்பகல் முதலே மாவட்டத்தின் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை அதிகமாக இருந்தது. நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வரிசையில் நிற்பதுபோல், மதுப்பிரியர்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கினர்.
மாவட்ட டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டை முன்னிட்டு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ரூ.4 கோடியே 87 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, டிசம்பர் 31-ஆம் தேதி ரூ.2 கோடியே 28 லட்சத்து 42 ஆயிரத்து 716 மதிப்புள்ள 4,864 பெட்டி பிராந்தி வகை மது பாட்டில்கள், ரூ.30 லட்சத்து 35 ஆயிரத்து 570 மதிப்புள்ள 2,120 பெட்டி பீர் வகை மது பாட்டல்கள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 286 ஆகும்.
இதேபோல், புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ரூ.2 கோடியே 3 லட்சத்து 53 ஆயிரத்து 940 மதிப்புள்ள 4,352 பெட்டி பிராந்தி வகை மது பாட்டல்கள், ரூ.25 லட்சத்து 9 ஆயிரத்து 870 மதிப்புள்ள 1,760 பீர் வகை மது பாட்டல்கள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 810 ஆகும்.
ஆக மொத்தம் 2 நாள்களில் மொத்தம் ரூ.4 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரத்து 096 மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கடந்த ஆண்டில், 1,100 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது