பிரளயநாத ராகு ஸ்தல சிவன் கோயிலில் ஜனவரி 8ல் ராகு, கேது பெயர்ச்சி விழா : பரிகார ஹோமங்கள்

 
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் காமராஜர் பாலம் அருகே அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோயிலில், ஜனவரி 8ம் தேதி மாலை 5 மணிக்கு
ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
ராகு பகவானது கன்னியா ராசியிலிருந்து சிம்மராசிக்கும், கேது பகவான் மீனராசியிலிருந்து கும்ப ராசிக்கும் இம் மாதம் 8ம் தேதி பிற்பகல் 12. 40 மணிக்கு பெயர்ச்சி அடைகின்றனர்.
இதையொட்டி இக் கோயிலில் அன்று மாலை 5 மணிக்கு ராகு, கேது ப்ரீத்தி ஹோமங்கள் வேதியர்களால் நடத்தப்படுகிறது.
 
அதுசமயம் ராகுவுக்கு, மேஷம், ரிசபம், கடகம், சிம்மம், மகரம், தனுசு ராசி நேயர்களும், கேதுவுக்கு, துலாம், மகரம், விருச்சிகம், கடகம், கும்பம், மீனராசி நேயர்களுக்கு பரிகார அர்ச்சனைகள் செய்யப்படவுள்ளது. மேலும், இக் கோயிலானது ராகு ஸ்தலமாக கருதப்படுவதால், நவகிரகம், பிரளயநாத சுவாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப. லதா, தொழிலதிபர் எம். மணி, பள்ளித்தாளர் டாக்டர் எம். மருதுபாண்டியன், மற்றும் பிரதோஷ விழாக்குழுவினர், கோயில் கணக்கர் சி. பூபதி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் அர்ச்சனைகள் செய்ய விரும்புவோர் தொடர்புக்கு 7598428894, 8760919188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.