
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி.
இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி பச்சையம்மாள்.அதே கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருடன் கணவருக்கு தெரியமால் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த கணவர் பழனிச்சாமி பச்சையம்மாளை கண்டித்துள்ளார்
ஆனால் கணவர் சொல்லை கேட்காமல் தனது கள்ளக்காதலுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் வெறுத்து போன பழனிச்சாமி பச்சையம்மாளை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்ற பச்சையம்மாளிடம் கள்ளக்காதலன் செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. .
இதனால் கோபமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சையம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து பச்சம்மாளின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவா்கள் வெட்டுகாயங்களுடன் உயிருக்கு போராடிய பச்சையம்மாளை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனா்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவான செந்தில்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பச்சையம்மாளுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



