தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

 
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை சட்டப்படி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்
மேலும் ஜி.கே. செய்தியாளர்களிடம் வாசன் தெரிவித்ததாவது:–
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன் பிடி படகுகளையும் பொங்கல் பண்டிகைக்குள் விடுதலை செய்ய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்திக்க உள்ளேன்.
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை சட்டப்படி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொன்மை வாய்ந்த கும்பகோணத்தை பாரம்பரிய நகராக அறிவித்து அதனை மத்திய அரசின் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
கும்பகோணம் மகாமக விழாவுக்கென ரெயில்வே துறை மயிலாடுதுறை–தஞ்சாவூர் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 9 கோடி நிதி ஒதுக்கியிருந்தது.
எனினும் இந்த பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. அவற்றை விரைவுபடுத்த வேண்டியும், வெளி மாநில மக்கள் அதிக அளவில் பங்கேற்கும் வகையில் மகாமக விழாவுக்கென சிறப்பு ரெயில்களை இயக்க வலியுறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) டெல்லி சென்று மத்திய ரெயில்வே மந்திரிய சுரேஷ் பிரபுவை சந்திக்க உள்ளேன்.
தேங்காய் கொப்பரை கொள்முதல் விலை கிலோ ரூ. 56 என்பதை ரூ. 150 ஆக மத்திய அரசு உயர்த்த வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை ரூ. 5 ஆயிரம் கோடியை வரும் பொங்கல் பண்டிகைக்குள் அவர்களுக்கு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
ஜி.கே. வாசன் கூறினார்.