
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் ரியல்மி 8 ப்ரோ, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது. இப்போது கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு விவரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் ஆனது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும். பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,499-ஆக உள்ளது. பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1600 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
இந்த கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன்.
குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.
சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன.
மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. எனவே கேமிங், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு அருமையாக பயன்படும். பின்பு Black மற்றும் Mint நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.



