ஊடக துறையினரை அவமானப்படுத்திய சகாயம் – 2016 இளைஞர்கள் எழுச்சி மதுரை மாநாடு

 
ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் நோக்கத்தில் மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் சகாயம்–2016 இளைஞர் எழுச்சி மாநாடு நேற்று இரவு நடந்தது.
நடைபெற்ற இம்மாநாட்டில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்து அவர்களுகு இருக்கை வசதியை மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் செய்து இந்தனர்.ஆனால் இம்மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் எண்ணூற்றுக்கு உட்பட்ட இளைஞர்களே வந்திருந்தனர்.
இதனால் நடைபெற்ற மாநாட்டிற்கு இளைஞர்கள் அதிகமானோர் வராததால் கூட்டம் குறைவாக இருந்தது என்று ஊடகதுறையினர் செய்தி வெளியிட்டு விடுவார்களே என மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் மனமுடைந்த சிலர் புலம்பி கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஒன்று கூடி சகாயம்–2016 இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகதுறையினரை அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி மாநாடு ஒருங்கிணைப்பாளர்களில் பலர் அவமானப் படுத்தினர்.
ஊடகதுறையினர் எந்த நிகழ்விற்கு செய்தி சேகரிக்க
சென்றாலும் செய்தியாளர்கள் நிகழ்சியின் ஒருங்கிணைப்பாளர் யார் ? என்று கேட்டு அவரிடம் செய்தி மற்றும் அதற்கான ஆவணங்கள் வாங்குவது வழக்கமான விசயம்.
ஆனால் நடைபேற்ற சகாயம்–2016 இளைஞர் எழுச்சி மாநாட்டில் சில முக்கிய நபர்களை கண்டுபிடித்து யார் ஒருங்கினைப்பாளர் என்று செய்தியாளர்கள்
கேட்டதற்கு அவர்கள் பதில் தர மறுத்தனர்.
 
மாறாக அவர்கள் செய்தியாளர்களை பார்த்து நீங்கள் ஏன் வந்தீர்கள்? எங்களுக்கு வாட்ஸ் ஆப், முகனூல், போன்ற சமூக ஊடகங்கள் இருக்கு. என கூறி ஒருங்கிணைப்பாளர்களில் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்டதால் இரு தரப்பினர் வாக்குவாதமு நடைபெற்றதால் மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது .
நடைபெற்ற மாநாட்டில் ஆற்று மணல், கிரானைட் வன வளம் உள்பட இயற்கை கனிமங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும், இலவச திட்டங்களை கைவிட வேண்டும், தமிழக மக்களின் வருமானத்தை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது, காவிரி, குண்டாறு, பாலாறு, வைகை நதிகளை உடனடியாக இணைக்க வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் ஒருங்கிணைப்பாளர் சையது உமர் முக்த்தார் பேசியதாவது:–
ஒரு சாதாரண பொறி மாதிரி ஆரம்பிக்கப்பட்டது. இன்று காட்டுத்தீ மாதிரி பரவி இருக்கிறது. இங்கு இனி ஒரு விதி செய்வோம் என்ற கொள்கை கோட்பாடு எடுக்கப்பட்டது. ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால் ஆயுதங்கள் ஏதும் தேவை இல்லை என்பார்கள்.
நாம் காலம் முழுவதும் போராடி கொண்டு இருக்கிறோம். ஒரு நல்ல தலைவர் அமைந்தால் மக்களுக்கு தேவையில்லாத ஒரு திட்டம் உள்ளே வராது. அப்படி தேவை இல்லாத திட்டங்கள் வருவதால் தான் நாம் போராடுகிறோம்.
எனவே ஒரு மாற்றம் வேண்டும். அதற்கு ஒரு நல்ல தலைமை வேண்டும். அந்த தலைமை யார் என்று பார்க்கும்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம்தான் தெரிகிறார். அவரை தவிர வேறு முகம் நமக்கு தெரியவில்லை. எனவே நாம் சகாயத்தை முன்னிலைபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த எழுச்சி மாநாடு நடத்தப்படுகிறது.
நமது குறிக்கோள் தமிழகத்தை மீட்டெடுக்கும் சுதந்திர போராட்டமாக இருக்க வேண்டும். லஞ்சம் கேட்பவர்களை தட்டி கேட்க வேண்டும். எத்தனை பேர் நம்மை எதிர்த்தாலும் நமது கொள்கை, கோட்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை அரசியலுக்கு அழைக்கிறோம். அதற்காகத்தான் எழுச்சி தமிழகம் என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஜாதி மதத்தை தூக்கி எறிந்து விட்டு இன்னும் 5 மாதங்கள் போராடினால் 5 வருடங்கள் நன்றாக வாழலாம். எனவே நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் இதை எடுத்து சொல்லுங்கள் என்று அவர் பேசினார்.
நிர்வாகி ச.மீ.ராஜ்குமார் பேசியதாவது:–
ஒரு தலைமை இல்லாத கூட்டத்திற்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது வேறு எங்கும் கிடையாது. அடிமை தனத்தை உடைத்தெடுக்கத்தான் நாம் இங்கு கூடி இருக்கிறோம். எதற்காக கூடி இருக்கிறோம். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரத்தான் கூடி இருக்கிறோம்.
உலகத்தில் மூத்தமொழி தமிழ் மொழி. நம் வரலாறு அழிக்கப்படுகிறது. தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ஒழித்து விட்டால் தமிழர் திருநாளான தைப்பொங்கலையும் ஒழித்து விடலாம் என அரசியல்வாதிகளின் சதி செயலாக இருக்கிறது. இதை நாம் எதிர்த்து போராட வேண்டும். மாற்றம் ஒன்றே நமது ஒரே வழி என்றார்.
ஜெக.சண்முகம் பேசும் போது, இன்று உச்சி முதல் உள்ளங்கால் வரை ஊழல் நடக்கிறது. மக்கள் நல திட்டம் என்று அறிவிக்கப்படுவது எல்லாம் மக்கள் பிரதிநிதிகளின் திட்டங்களாகி விடுகிறது.
எனவே ஊழலை ஒழிக்க நாம் ஒன்றுபட வேண்டும். ஆகவே எளிமையான, நேர்மையான சகாயம் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவர் பேசினார்.