Hydroxychloroquine என்னும் மலேரியா மாத்திரியை ஏற்றுமதியை கடந்த சனிக்கிழமை முதல் தடை செய்து உத்தரவிட்டது இந்திய அரசு.
ஞாயிற்றுக் கிழமை அன்று இந்திய பிரதமர் நரேந்தர மோடியை
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசினார். அந்த மாத்திரைகள் எங்களுக்கு வேண்டும், அனுப்பி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கிறது. அப்போது ஒரு பத்திரிகையாளர், “ நரேந்தர மோடியின்
இந்திய அரசு ( மலேரியா மாத்திரை) ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கிறது.
அமெரிக்காவில் இருந்து மருத்துவப் பொருளை ஏற்றுமதி செய்ய நீங்கள் தடை விதித்து இருக்கிறீர்களே, அந்த தடைக்கு எதிராக மற்ற நாடுகள் தரும் பதிலடி போன்றது இது (இந்தியா விதித்த தடை) என்று கவலை கொள்கிறீர்களா?” என கேட்கிறார்.
நிருபரின் அந்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், இந்தியாவின் ஏற்றுமதி மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதனால்,அமெரிக்காவுக்கு எதிராக விதிக்கப் பட்டதல்ல என்கிறார். மோடியுடன் நடந்த இணக்கமான பேச்சு வார்த்தையைப் பற்றி தெரிவிக்கிறார்.
அமெரிக்கா விதித்திருக்கும் தடைக்கு மற்ற நாடுகள் தரும் பதிலடி போன்றதாக இந்தியாவின் தடை ஆணை இருக்குமானால், பதிலடிக்கு பதிலடி தருவேன் என்று தான் கூறுகிறார். மாத்திரை தரா விட்டால் பதிலடி என்றல்ல.
எனினும், இந்தியா விதித்த ஏற்றுமதித் தடையின் விளைவாக இந்திய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு நன்மை கிடைத்து இருக்கிறது. மலேரியா மாத்திரையை உற்பத்தி செய்யும்
இந்திய மருத்துவ நிறுவனமான IPCA வுக்கு அமெரிக்கா
விதித்து இருந்த ஏற்றுமதித் தடை தளர்த்தப்பட்டு இருக்கிறது.
மலேரியா மாத்திரை ஏற்றுமதிக்கு பேரமாக IPCA தடை தளர்வை மட்டும் தான் இந்தியா பெற்றதா, அல்லது மேலும் சலுகைகளை பெற்றதா என்று தெரியவில்லை.
கொரோனா பாதிப்பு சர்வதேச நெருக்கடி. ஒவ்வொரு நெருக்கடியும் வெறும் துயரம் மட்டுமல்ல. ஒரு நல்ல வாய்ப்பும் கூட! கொரோனா தடுப்பு மருத்துவ சாதனங்களை வைத்து உலக சந்தையில் 5 G ஐ விற்பனை செய்வது வரையிலான முயற்சிகளில் சீனா ஈடுபடுகிறது.
இந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.
எல்லாமும் வெளியில் தெரிய அவசியமில்லை. வெளியில் தெரிவது மட்டுமே உலக அரசியல் அல்ல.
- வசந்தன் பெருமாள்