சிம்பு பீப் பாடல்’ வழக்கில் தர்மம் வென்றது, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை : டி.ராஜேந்தர்

 
‘பீப் பாடல்’ சர்ச்சை தொடர்பான வழக்கில், சிம்புவுக்கு சென்னை உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது தர்மம் வென்றதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பீப்பாடல் சர்ச்சை தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் டி.ராஜேந்தர், கூறியதாவது : –
பீப் பாடலை தேவையில்லாமல் பூதாகரமாக்கிவிட்டார்கள். யாரோ ஒரு விஷக்கிருமி அந்தப்பாடலை திருடி, சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். என் மகனின் வாழ்க்கையில் திருப்பமான நாள் இன்று. எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் எடுத்து உரைத்தோம். அதன்படி இந்த வழக்கில் இன்று எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து தர்மம் வென்றது.
பீப்பாடல் விவகாரத்தில் நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, ரேகிணி, சுகாஷினி உள்ளிட்டோரைத் தவிர வேறு யாறும் உதவ முன்வரவில்லை .
எங்களுக்கு ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, குறிப்பாக இறைவனுக்கு நன்றி என்றவர், பாடலை திருடி வெளியிட்டவர்கள் மீது நான் கொடுத்த புகாருக்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று டி.ராஜேந்தர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது குற்றம் சாட்டியுள்ளார்.