ஹூஸ்டனில் புயல்! நடக்குமா ஹவுடி மோடி?

உலகம்
modi trump - 2026

இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்க உள்ள ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வரும் ஹூஸ்டன் நகரில் புயல் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் செப்.,22 ம் தேதி இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 50,000 க்கும் அதிகமானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக பிரதமர் மோடி இன்று (செப்.,20) இரவு அமெரிக்கா செல்ல உள்ளார்https://dhinasari.com/politics/106821-re-meeting-prime-minister-president-trump%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d.html.

இந்நிலையில் டெக்சாசில் கடும் புயல் காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. இதனால் டெக்சாசின் பல பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்கிழக்கு டெக்சாசில் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

- 2026

தென்கிழக்கு டெக்சாசிற்கு உட்பட்ட 13 நாடுகளில் அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக டெக்சாஸ் கவர்னர் கிரிக் அபோர்ட் அறிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக திடீரென ஏற்பட்ட புயலால் கடும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஹவுடி மோடி நிகழ்ச்சியை கவர்னர் நிறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.