பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தேசிய அளவிலான17 வயதுக்கு உட்பட்டோருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னை முகப்பேரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ரித்திக்கிற்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 4 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற மாணவர் ரித்திக்கிற்கு இந்தத் ஊக்கத்தொகை ரூபாய் 4 லட்சம் வழங்கப்படுவதாகவும் அவர் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள்‌ படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதேபோல், உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித் தொகைத் திட்டத்தில் ஏற்கனவே உள்ள 5 வீரர்களோடு, வாள்வீச்சுப் போட்டியில் தற்போது சிறந்து விளங்கும் சென்னை வீராங்கனை பவானிதேவியையும் சேர்த்திட உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் பவானிதேவி சர்வதேச போட்டிகளில் மேலும் பல வெற்றிகள் முதலமைச்சர் ஜெயலலிதா பெற வாழ்த்தியுள்ளார்.