கேரள முதல்வரின் மகளுக்கு ‘தாலி கட்டி’ திருமணம்!

Published:

kerala cm daughter marrige

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸ் இருவருக்கும் இன்று திருமணம் நடந்தது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருபவர் . இவருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசியத் தலைவர் பி.ஏ.முகமது ரியாஸுக்கும் இன்று காலை 10:30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள கிளிஃப் ஹவுஸில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.

தற்போதுள்ள கோவிட் 19 வழிகாட்டுதல்களின்படி 50-க்கும் குறைவான நபர்களை மட்டுமே கொண்டு திருமண விழா நடத்தப்பட்டது. இரண்டு குடும்பங்களைத் தவிர, ரியாஸ் மற்றும் வீணா இருவரின் நெருங்கிய நண்பர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

ரியாஸ் 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரசின் எம்.கே.ராகவனிடம் 838 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி பி.எம். அப்துல் காதர் மற்றும் கே.எம்.அய்ஷாபி ஆகியோரின் மகனாவார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img