ஜூன் 21ல்… திருமலை ஸ்ரீவாரி ஆலயம் மூடப்படும்!

Published:

thirumala thirupathi
thirumala thirupathi

ஜூன் 21 சூரிய கிரகணம் காரணமாக இந்த மாதம் 21 ஆம் தேதி விடியற்காலையிலிருந்து மத்தியானம் ஒரு மணிவரை ஸ்ரீவாரு ஆலயம் மூடப்படும் என்றும் மீண்டும் மதியம் இரண்டரை மணிக்கு ஆலய சுத்தி செய்து அதன் பிறகு பக்தர்களுக்கு தரிசனம் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் தேவஸ்தானம் ஈவோ அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

ஜூன் 21 அன்று காலை 10.18மணி முதல் மதியம் 1.38 மணி வரை சூரியகிரகணம் இருக்கும் என்று ஈவோ தெரிவித்தார்.

ஞாயிறன்று திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஏற்பாடு செய்த டயல் யுவர் ஈவோ நிகழ்ச்சியில் இந்த விஷயம் தெரிவித்தார்.

கரோனா பரவுதல் பின்னணியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பக்தர்களை உத்தேசித்து உரையாற்றினார். கடந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட டயல் யுவர் ஈவோ நிகழ்ச்சியில் பக்தர்களிடம் இருந்து கிடைத்த யோசனைகளின் படி இந்த முறை முயற்சி செய்து ஞாயிறு அன்று காலை 9 லிருந்து 10 வரை நடத்தினார்கள். பக்தர்களின் பங்காற்றல் நன்றாக இருப்பதாகவும் இதேபோல் தொடரும் என்றும் கூறினார்.

ttd eo anil kumar singhal
ttd eo anil kumar singhal

கரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதற்கு சென்ற மார்ச் 20ல் இருந்து திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தோடுகூட திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு தொடர்புடைய அனைத்து ஆலயங்களிலும் பக்தர்களுக்கு தரிசனங்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். சில சமூக வலைதளங்களில் ஆலயங்களை மூடி விட்டார்கள் என்றும் கைங்கரியங்கள் நடக்கவில்லை என்றும் அன்ன பிரசாதங்கள் சரியாக நிவேதிக்க படவில்லை என்றும் தவறான பிரச்சாரங்கள் செய்தார்கள் என்று நினைவுபடுத்தினார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

ஆனால் பக்தர்களின் மனநிலைகள் பாதிக்கப்படாமல் தெளிவான அறிவிப்புகள் செய்தோம் என்றார். ஆலயங்களில் நடக்கும் அனைத்து சேவைகளும் கைங்கரியங்களும் நிவேதனங்களும் உற்சவங்களும் சம்பிரதாயப்படி ஏகாந்தமாக நடந்தன என்று கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img