படிப்பில் கவனம் செலுத்தும் அப்சல் குரு மகன்; பத்தாம் வகுப்பில் 95% மதிப்பெண் எடுத்து சாதனை

புது தில்லி:

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 2013ல் தூக்கில் இடப்பட்ட முக்கிய குற்றவாளியான அப்சல் குருவின் மகன் ஹலிப் குரு 10 ஆம் வகுப்புத் தேர்வில் 95% மதிப்பெண் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அப்சல் குரு மகன் படிப்பில் கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை நடத்திய இந்தத் தேர்வில் ஹலிப் குரு 500 க்கு 474 மதிப்பெண் எடுத்துள்ளான். எழுதிய 5 பாடங்களிலும் A1 மதிப்பெண்கள் பெற்றுள்ளான். கஷ்டமான சூழ்நிலையிலும் சாதித்த மாணவன் என சமூக ஊடகங்களில் ஹலிப் குருவுக்கு பாரட்டுக்கள் குவிகின்றான.

2013ல் காஷ்மீர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஹலிப் குரு தான் ஒரு மருத்துவராக வரவேண்டும் என தெரிவித்திருந்தான். அப்பாவுக்கு நான் ஒரு மருத்துவராக வர விரும்புவது தெரியும்; அதற்காக அவர் என்னை கடினமாக உழைக்கச் சொல்வார். நான் அவரை ஜெயிலில் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் அதையே திரும்பத் திரும்பச் சொல்வார். நான் 2013 ஆகஸ்ட் மாதம் அப்பாவை சந்திக்க சென்ற போது அவர் எனக்கு குரான் புத்தகத்தையும் அதனுடன் ஒரு அறிவியல் புத்தகத்தையும் பரிசாக தந்தார் என ஹலிப் குரு தனது பேட்டியில் கூறியிருந்தான்.

அப்சல் குருவின் மகனாவது நல் வழியில் திரும்பி படிப்பில் கவனம் செலுத்தி நாட்டுக்கு பலன் தரும் வகையில் திகழ வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.