தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக பார்த்திபன்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை லைஃப் ஸ்டைல்
vishall1 - 2026

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் விஷால் தலைமையில் நடந்தது. இதில், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழுக் கூட்டத்தில் சங்க துணைத் தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக பார்த்திபன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப செயற் குழுவில் முடிவு செய்யப் பட்டுள்ளதாக, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜிஎஸ்டி குறைப்பால் சினிமா டிக்கெட்டிற்கான கட்டணம் குறையும் என்றும், அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் பொதுக்குழு தேதி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார் விஷால்.

மேலும், இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம் என்றார் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.