சேவூர் ராமச்சந்திரன், சிவி சண்முகம் அதிமுக., பொறுப்பில் இருந்து விடுவிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
admk executive meeting1 - 2026

அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

அதிமுக அமைப்பு செயலாளராக ஆர்.லட்சுமணன், கொள்கை பரப்பு துணைச்செயலாளராக பேராசியர் பொன்னுசாமி நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

அதிமுக தொண்டர்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள 5 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இந்தக் குழுவில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கு இடமளிக்கப் பட்டுள்ளது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ராஜன் விடுவிக்கப் பட்டுள்ளதாக, அதிமுக அறிவித்துள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக தூசி மோகன், தெற்கு மாவட்ட செயலாளராக சேவூர் ராமச்சந்திரன் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.