ஜல்லிக்கட்டு தடையை நீக்க களம் குதித்த வானதி சீனிவாசன் !

 

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருப்பதை சட்டப்படி அணுகி தடையை நீக்குவதற்கான முயற்சிகள் தீவிரம் அடைந்து உள்ளன.

இந்த நிலையில் பாரதீய ஜனதா ஜனதா தமிழக கட்சியின் துணைத்தலைவரும்,வழக்கறிஞருமான வானதி சீனிவாசன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ‘ரேக்ளா ரேஸ்’ போட்டி அமைப்பு குழுவினருக்காக அவர் ஆஜர் ஆகிறார்.

 

தென் மாவட்டங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து இந்த பிரச்சினையை சட்டப்படி அணுகுவது பற்றி ஆலோசித்து வருகிறார்கள்.மூத்த அட்டர்னி ஜெனரலுடன் ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்று அந்த குழுவினர் ஆலோசனை பெறுகின்றனர்.

 

வானதி சீனிவாசன் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவினர் இன்று டெல்லி சென்று சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அவர்கள் முடிவு செய்கிறார்கள்.