தமிழர்கள் கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை: குஷ்பு

KUSHBOO புதுதில்லி: 20 தமிழர்கள் ஆந்திர மாநில போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் ஆந்திர மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனையாக உள்ளது. இந்தப் படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் உடல்களில் காணப்படும் குண்டுக் காயங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. உடல்கள் கிடந்த இடத்தில் பழைய செம்மரக்கட்டைகள் போடப் பட்டிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. எனவே இந்த சம்பவத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துவதாகக் கூறினார்