குமரி ஆர்எஸ்எஸ்., முகாமை வீடியோ எடுத்த இருவர்! என்ஐஏ., விசாரணை!

Published:

nia - 2026

கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை ரகசியமாக படம் பிடித்த இரண்டு பேர் செல்போனில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை தொடங்கியுள்ளது

கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் கடந்த 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.

முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பாபநாச தீர்த்தம் மற்றும் அரசு மருத்துவமனையில் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனர்

அப்போது சிலர் அவர்களை ரகசியமாக கண்காணித்தனர். அதேபோல் நேற்று முகாம் நடந்து கொண்டிருந்தபோது முட்புதரில் பதுங்கி இருந்து இரண்டு பேர் அவர்களை கண்காணித்தனர் …

இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர்இருவரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் செல்போனில் பகவதி அம்மன் கோவில் குகநாதீஸ்வரர் கோயில் கூடங்குளம் மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உழவாரப்பணி உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர் அவர்களது செல்போனில் யார் யாரிடம் தொடர்பு கொண்டுள்ளனர் என்று ஆய்வு செய்யப்பட்டது

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது … அதில் எங்களது முகாம் நடந்த இடத்தில் மர்மநபர்கள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்துள்ளனர் எதற்காக எடுத்தனர் என்று தெரியவில்லை எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக பிடிபட்டுள்ள இரண்டு இளைஞர்களையும் தங்கள் கஸ்டடியில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்

அதில் ஒரு நபரின் செல்போன் எண்ணில் இருந்து சர்வதேச பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது…

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Related articles

Recent articles

spot_img