பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் நடவடிக்கை பாயும்! காவல் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

சற்றுமுன் சென்னை தமிழகம்
pon manickavel - 2026

சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரிக்கு ஒத்துழைக்க மறுத்தால் நடவடிக்கை பாயும் என்று உயர் நீதிமன்றம், காவல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை அவரது பணி ஓய்வுக்குப் பின்னும் நியமித்து, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வர்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்நிலையில், பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், அவர் மீது புகார்களைக் கூறி வருகின்றனர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் உள்ள காவல் அதிகாரிகள் சிலர். இதனால் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் குழப்பம் நிலவுகிறது. இதை அடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட நீதிமன்றம், சிறப்பு அதிகாரிக்கு ஒத்துழைக்க மறுத்தால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் இடை நீக்கம் செய்ய நேரிடும் என்று காவல் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து சிறப்பு அதிகாரிக்கு காவல் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.