கிழக்கு முன்னேறாமல் நாடு முழுமை பெறாது: அசாமில் மோடி பேச்சு

சற்றுமுன்

சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். அங்கே திப்ரூகர் நகரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் பிளாஸ்டிக் மற்றும் மெழுகுப் பொருட்கள் தயாரிப்பதற்கான 2 பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளை அவர் தொடங்கி வைத்தார்.

அந்த விழாவில்  மோடி பேசும்போது…

இந்த 2 ஆலைகளையும் மாநிலத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தொழிற்சாலைகளுக்கு ஏற்ற வகையில் இங்கு இன்னும் பல சிறிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் அது இயற்கை வளத்தை மதிப்படையச் செய்வதுடன் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும்.

ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறாவிட்டால் இந்தியாவின் முன்னேற்றம் முழுமை அடையாது. இதற்காக அண்டை நாடுகளான மியான்மர், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகியவற்றுடன் நமது கிழக்கு மாநிலங்களும் பயன் அடையும் வகையில் ‘கிழக்கு கொள்கை’ என்னும் திட்டத்தை மத்திய அரசு வகுத்து உள்ளது என்று அவர் பேசினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.