மோடி மீண்டும் பிரதமர் ஆக… தமிழில் கூட்டுப் பிரார்த்தனை!

Published:

Modi sarkar 2019 - 2026

அந்நிய தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சமயங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் சமயமே முக்கியம், தேசமல்ல என்று செயல்படுவது ஒன்றும் புதியதல்ல; இவர்கள் கடந்த நாலரை ஆண்டுக்காலமாக புற்றீசல்களைப் போல வெளிவந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியும் இருக்குமா, ஆஹாங்…. அப்படியெல்லாம் இருக்காது, அவர்கள் எல்லாம் தேசத்துக்கு விரோதமாக செயல்படமாட்டார்கள் என்று அறியாமை இருளில் வெள்ளந்திகளாக நம்மில் பலர் இருந்தோம், இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.

ஆனால் நரேந்திர மோதி தோற்க வேண்டும் என்று சற்றுமுன் பிறந்த குழந்தை முதல் சற்று நேரத்தில் இறக்கவிருக்கும் கிழவன் வரை அந்நிய மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக கங்கணம் கட்டிக் கொண்டு அவர்கள் வழிபாட்டுத் தலங்களில் முழங்குவதும், சூழ்ச்சிகள் செய்வதும், செயல்படுவதும் நாட்டின் சீர்கேட்டினை, சனாதனிகளின் மெத்தனப் போக்கினை, எதிர்ப்பின் வல்லமையை, எதிரிகளின் மனவுறுதியை துல்லியமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் அதே வேளையில், நம்மிடம் வஜ்ராயுதமாக, பிரும்மாஸ்திரமாக இருக்கும் நரேந்திர மோதியின் அத்தியாவசியத்தை நமக்கு உணர வைக்கிறது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

2019 என்பது மிகப்பெரிய திருப்புமுனை என்பதில் சந்தேகமில்லை. நாம் ஒரு தேசமாக, ஒரு சமூகமாக, சனாதனிகளாக வாழ்வோமா அல்லது வீழ்வோமா என்பதை இந்த ஆண்டு தீர்மானிக்கும். நரேந்திர மோதி தனிநபரல்ல, அவர் தேசபக்தியின், தேசபக்தர்களின், தேசியத்தின், சனாதனிகளின் மொத்த உருவம்.

அவர் வெற்றியே நமது வெற்றி எனும் போது இந்த வெற்றிக்கு அவரவர பங்களிப்பு, அவரவர் தகுதிக்கும் திறனுக்கும் ஏற்ப கண்டிப்பாக அளிக்க வேண்டும், அதை நீங்கள் அனைவரும் அளித்து வருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவற்றோடு கூடவே நாம் அன்றாடம் நடத்தும் வழிபாடுகளிலோ, கோயில்களுக்கும் விசேஷத் தலங்களுக்கும் செல்லும் வேளையில், அங்கே நம் தேசத்தின் ஒளிவிளக்கு, நம்பிக்கைச் சூரியன் நரேந்திர மோதியின் நலனுக்கும் அவரது பிரும்மாண்டமான வெற்றிக்கும் சங்கல்பம் பூண்டும் பிரார்த்தனை செய்வோம்.

தமிழில் இருக்கும் இந்த சங்கல்பத்தை இயற்றியவர் நஸரத்பேட்டை, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியில் சம்ஸ்க்ருதப் பிரிவு பேராசிரியராக இருக்கும் எஸ். வேணுகோபாலன். அவர் சிறந்த தேசபக்தர், ஆகையால் இயல்பாகவே அவருக்கு ராஷ்ட்ர நாயகனான நரேந்திர மோதி அவர்கள் மீது, நம் எல்லோரைப் போலவே பேரார்வமும், ஆழ்ந்த பற்றும் இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இருக்க முடியாது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

வடமொழியிலே ஒரு வழக்கு உண்டு – ராஷ்ட்ர சர்வோபரி ஹை….. அதாவது தேசமே பிரதானம். ஆகையால் தேசத்தையே பிரதானமாகக் கொண்ட நீங்கள் அனைவரும், இன்றே ஒரு விதி செய்வீர், சங்கல்பம் பூணுவீர், தேசம் காப்பீர்.

  • கருத்து வடிவம்: ஆர். சுதர்ஸன்

Related articles

Recent articles

spot_img