விஜயகாந்தை சந்திக்க வருகிறார் ஓபிஎஸ்.,!

சற்றுமுன் சென்னை

vijayakanth piyushgoyal - 2026

தேமுதிக நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ள நிலையில் விஜயகாந்தை சந்திக்க ஓபிஎஸ் அவரது வீட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது! இந்நிலையில் தனது முடிவை அறிவிக்காமல் இழுத்துக் கொண்டே வந்தார் விஜயகாந்த்!

எனவே விஜயகாந்தை ஓபிஎஸ் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதிப் படுத்துவது  குறித்து பேச உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன!

திமுக கூட்டணியில் பெரும்பாலான இடங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் வாய்ப்பு இல்லை என்ற நிலையில் ஓ பன்னீர்செல்வம் விஜயகாந்தை சந்திக்க உள்ளார்!

பாஜக., தேசியத் தலைவர்கள் பலமுறை விஜயகாந்த்தை வலியுறுத்தியுள்ளனர். மேலும், சிலரும் விஜயகாந்த்தை சந்தித்து பேசியுள்ள நிலையில், அதிமுக., கூட்டணியில் ஏற்கெனவே விஜயகாந்த் சேர்வதாகக் கூறியிருந்தார். ஆனால், திடீரென்று நாளை ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், வரும் 6 ஆம் தேதி வண்டலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி. அந்தக் கூட்டத்தில் ஓர் அணியாக க்கூட்டணிக் கட்சியினர் மேடையில் இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார். பாஜக., தலைவர்கள், அதிமுக., பாமக., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் இதில் இடம்பெறுவது உறுதியான நிலையில், விஜயகாந்தும் உறுதி செய்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று ஓபிஎஸ் அவரது இல்லத்துக்கே சென்று வலியுறுத்தப் போவதாகக் கூறப்படுகிறது.

இன்று மாலை 5.30 மணி அளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வருகை தரவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.