தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த அன்புமணி! கோரிக்கை மனுவையும் அளித்தார்!

சற்றுமுன் தமிழகம்

edappadi pmk anbumani - 2026

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது ஒரு கோரிக்கை மனுவையும் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் பேசினேன். காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவை முதல்வரிடம் அளித்தேன்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக அறிவிப்பது தொடர்பாக குழு அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வேண்டும் என்று பா.ம.க விரும்புகிறது. எங்கள் கூட்டணிக்கு தேமுதிக வருவதை வரவேற்கிறோம்

மேலும், பாமக.,வின் வெகு நாள் கோரிக்கையான 7 தமிழர்கள் விடுதலை குறித்து, பாஜகவிடம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.