
தில்லியில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட பெண்ணை படுக்கையறைக்கு அழைத்த கொடூரன் காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
இந்தியாவின் கொரோனோ இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தில்லியில் தொற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தலைநகரில் நிலவிவரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் உதவி என தெரிந்தவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு பலர் அன்றாடம் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் தில்லியைச் சூழலியல் போராளியான சேர்ந்த பவ்ரீன் காந்தாரி தனது ட்விட்டர் பக்கத்தில் என் நெருங்கிய தோழியின் தந்தை தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை அவருக்கு யாராவது உதவி செய்யும்படி என்னுடைய வீட்டிற்கு அருகே வசிக்கும் தோழியின் தங்கை கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த நபர் என்னுடன் அந்த பெண் படுக்கையை பகிர்ந்து கொண்டால் நான் ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார்.
இதற்கு அந்த பெண் இது போன்ற கொடூர நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். அதற்கு சமூகவலைத்தள வாசிகள் பலர் நீங்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி தங்களது பதில்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் ரீதியாக பலர் அத்துமீறும் காட்சி அன்றாடம் நிகழ்ந்து கொண்டே வருகிறது. இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரின் கோரிக்கையாக இருக்கின்றது.
My friend’s sister like my baby sister was asked by a neighbour in an elite colony to sleep with him for an oxygen cylinder that she desperately needed for her father;
— Bhavreen Kandhari (@BhavreenMK) May 11, 2021
What action can be taken because the b* will obviously deny, no?#HumanityIsDead