திண்டுக்கல் மாவட்டம் மேல்மலை கிராமமான மன்னவனூரில் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள கிராமவாசிகள் ஆற்றுப் பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், சேதமடைந்ததை ஆற்றுப்பாசன நீர்த்தேக்கம் இது வரை சரி செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டும் மக்கள், பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.




