ஐபிஎல்லில் டெல்லி – மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் டெல்லி அணி 37 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்தது. 214 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி, 19.2 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
நாளை நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்-கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது.




