ஜெ. மரணத்துக்குக் காரணம் திமுக.,!: வெல்லமண்டி நடராஜன் பேச்சு

சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

vellamandi natarajan - 2026

தமிழக முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுக.,தான் என்று அடித்துக் கூறினார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

தேமுதிக., பொருளாளர் பிரேமலதா தலைமையில் திருச்சியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தில் வெல்லமண்டி நடராஜன் பேசினார். அப்போது அவர்,

தேர்தலில் ‘ஜெ’ எப்படி திட்டங்களை தீட்டி செயல்படுவாரோ, அதே பாணியில் தேமுதிகவின் பொருளாளராக உள்ள ‘அண்ணியார்’ அவர்கள் செயல்படுகிறார் என்றார். மேலும், மு.முதல்வர் ‘ஜெ’ மரணத்திற்கு காரணம் திமுகவினர் தான் என்று கூறினார் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

அதிமுகவை ராணுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தியவர் ‘ஜெ’. அதே பாணியில் ‘அண்ணியார்’ அவர்களும் ராணுவ கட்டுப்பாட்டோடு தேமுதிகவை நடத்துகிறார் என்று பிரேமலதாவின் திறமைக்கு ஒரு ஐஸ் வைத்தார் வெல்லமண்டி நடராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.