படப்பிடிப்பில் காயம்! கால் கட்டுடன் காட்சி அளித்த விஷால்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

vishal shooting - 2026

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் சூட்டிங் துருக்கி நாட்டில் நடைபெறுகிறது.. அங்கு நடைபெற்ற சண்டை காட்சிக்கான படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து ஏற்பட்டு கை, கால்களில் அடிபட்டு இருக்கிறது.

‘அயோக்யா’ படத்தைத் தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் விஷால். தமன்னா நாயகியாக நடித்து வரும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பைக் சண்டைக் காட்சி ஒன்றை சண்டை இயக்குநர் அன்பறிவு இயக்கத்தில் படமாக்கி வந்தார்கள். அப்போது பைக்கில் விஷால் சென்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

உடனடியாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இடது கையிலும், காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு லேசாகத் தான் அடிபட்டதா அல்லது வலுவான அடியா என்பதைப் பொருத்து, அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வாரா அல்லது இந்தியா திரும்புவாரா என்பது தெரியவரும்.

இருப்பினும், விஷால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்று தகவல் வெளியான போதும் படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அண்மையில் தான் விஷாலுக்கு கால் கட்டு போடும் விதமாக நிச்சயதார்த்த வைபவம் நடந்து முடிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.