October 23, 2021, 8:57 pm
More

    ARTICLE - SECTIONS

    மோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை: படக்குழு!

    pm modi trailer - 1பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து பிஎம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.

    இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.ஓமங்க் குமார் இயக்கி உள்ளார்.

    இந்த படத்தை அடுத்த மாதம் ஏப்ரல் 12ந் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியானால் பா.ஜனதாவுக்கு ஆதாயமாக தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று கூறி, படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.

    இதைத்தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்கள்.

    அதில் மோடி படத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் காட்சிகள் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,137FansLike
    368FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,580FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-