‘ஓ காதல் கண்மணி’ வெளியாவதை நினைத்துக் கவலைப்படும் சல்மான்

O Kadhal Kanmani Audio Success Press Meet Event Stills (17) சென்னை: ஓ காதல் கண்மணி படம் வெளியாவதை நினைத்துக் கவலையாக இருப்பதாக படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள காதல் படம் ஓ காதல் கண்மணி. இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பட்டுள்ள நிலையில், ஓ காதல் கண்மணி படக்குழுவினர் சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது படத்தின் நாயகன் துல்கர் சல்மான் கூறுகையில், இது என் கனவுப் படம். ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த ஓராண்டும் கனவு போன்று இருந்தது. அந்தக் கனவில் இருந்து கண் விழிக்கவே கூடாது என்று தோன்றியது. தொடர்ந்து அதே கனவில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். பி.சி.ஸ்ரீராம், மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றியது ஒரு மேஜிக் போன்று இருந்தது. இது கனவுக் குழு. என் கனவில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்பதால் படம் ரிலீஸாவதை நினைத்து கவலையாக உள்ளது என்றார்.