அரங்கன் வாசலில் அநீதியின் அரங்கேற்றம்…! சட்டமும் நீதியும் இந்துக்களுக்கே எதிரிகளாய்…!

Published:

narmatha srirangam - 2026

ஒரு நாட்டின் சட்டமும் நீதியும் அந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக இருப்பதை இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது! தவறு சட்டங்களின் மீதா அல்லது சட்டத்தை அமல்படுத்துபவர்கள் மீதா என்பது விவாதத்துக்குரியது!

நாட்டின் பாரம்பரிய கலாசார விழுமியங்களை அழிக்க நினைப்பவர்களுக்கும் துரோகிகளுக்குமே சாதகமாக நீதி நடந்து கொள்வதாக இப்போது சாமானிய இந்துக்கள் உணர்ந்து வருகிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்னர் ஸ்ரீரங்கத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த எண்ணத்தை வேரூன்ற வைத்திருக்கிறது. இது குறித்து வைரலாகும் ஒரு பதிவு….

அரங்கன் வாசலில் அநீதியின் அரங்கேற்றம்….
பாவம் நர்மதா….! கேட்க நாதியில்லையா ..
11.4.2019 அன்று, திருவரங்கம் தெற்கு கோபுர வாசலில், திருமதி. நர்மதா நந்தகுமார் என்ற பெண், கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களின் காலணியை வாங்கித்
துடைத்தபடி,
“ஆண்டாளையும், பகவான் கிருஷ்ணரையும் இழிவுபடுத்தும், இந்து விரோத கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று தனது உணர்வை வெளிப்படுத்தி யிருக்கிறார்.. பக்தர்களின் செருப்பை துடைத்தபடி, அவர் சொன்ன கருத்து, பொதுமக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது..

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

ஆனால், இவரது செய்கையை அறிந்த, காங்கிரஸ் திமுக ஆட்கள், அந்தப்பெண் மீது, கொலைமிரட்டல் என பொய்வழக்கு தொடுத்து, கைது செய்து சிறையில் அடைத்து, ஜன நாயகத்தின் குரல் வளையை நெறித்திருக் கிறார்கள்..????????

இந்துக்கள் மீது, இதுபோன்ற கொடுங்கோன்மை பாகிஸ்தானில் கூட நடந்திருக்குமா என்பது சந்தேகமே…

இந்த இந்து விரோத கூட்டணிக்கு, தமிழக காவல்துறை துணை போயிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது…

பக்தர் பாதம் பணிவதும், பாகவத சேவை என்பதும், இந்து தர்மத்தின் உயரிய கோட்பாடுகள்.

அவ்வகையில், தனது நியாயமான உணர்வை, அறவழியில், ஆன்மீக நெறியில், ஜனநாயக முறையில் வெளிப்படுத்திய, இந்த இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நாளை வேறு எந்த இந்துப் பெண்ணுக்கும் நேராது என்பது என்ன நிச்சயம்…???

ஒருபுறம், நாங்கள் இந்துக்களுக்கு விரோதி இல்லை என ஏமாற்றி, இந்துக்களை முட்டாளாக்கும் பித்தலாட்ட தேர்தல் பிரச்சாரம்…

ஆனால், உண்மையில், இந்துக்களை நசுக்கும் நேரடியான நாசவேலை….
*இப்போது வாக்கு கேட்கும்போதே, இந்துக்களுக்கு இந்த கதி என்றால், 18.4.2019 அன்று, வாக்களித்த பின், நம் கதி என்னாகும்…??? நினைக்கவே பயமாக இருக்கிறது.

  • என்று முடிகிறது அந்தப் பதிவு.
ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img