உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மே மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க உள்ள 15 இந்திய அணி வீரர்களை எம்.எஸ். பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் தேர்வு செய்ய உள்ளனர். இந்த தேர்வின் போது, 4-வது வரிசை, ஆல்ரவுண்டர், ஸ்பின்னர்கள், 2-வது விக்கெட் கீப்பர் போன்றவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த தேர்வு குழுவால் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல் இன்று மும்பையில் அறிவிக்கப்பட உள்ளது.
வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்க உள்ள உலக கோப்பை போட்டிக்காக அட்டவணை அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வரும் ஜூன் 5ம் தேதி நடக்க உள்ள துவக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது.