திமுக., அதிமுக., மோதல்! கலவர பூமியானது கரூர்!

சற்றுமுன் தமிழகம் திருச்சி

karur senthilbalaji jothimani2 - 2026

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்தது.

இந்த இறுதி கட்ட பிரசாரத்தின் போது கரூர், வெங்கமேடு பகுதியில் திமுக கூட்டணியினர் பிரச்சாரம் மேற் கொண்டனர்.

எதிர்திசையில் வாக்கு கேட்டு வந்த அதிமுக தொண்டர்களில் சிலர் திடீரென திமுகவினரை தாக்க தொடங்கினர்.

இதனால் அப்பகுதியே கலவர பூமியாக மாறியது. காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த நாஞ்சில் சம்பத்தின் கார் அடித்து நொறுக்கப்பட்டது, அதோடு தடுக்க முயன்ற காவல்துறையினரும் தாக்கப்பட்டனர்.

தற்போது கூடுதல் காவல் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.