பெண்களின் புர்காவை பிடித்திழுத்தது திமுக.,! பெட்ரோல் குண்டு போட்டது எஸ்டிபிஐ! பாமக.,வை பழிசுமத்திய தயாநிதி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

sdpi dmk clash - 2026

முஸ்லிம் பெண்களின் புர்காவை பிடித்து இழுத்தது திமுக! பதிலடியாக பெட்ரோல் குண்டு போட்டது எஸ்.டி.பி.ஐ! ஆனால், பாமக மீது பழிபோட்டார் தயாநிதி மாறன்!
மத்திய சென்னை தொகுதியில் ஏப்.11 அன்று பிரசாரம் செய்த முஸ்லிம் பெண்களின் புர்க்காவை பிடித்து இழுத்து திமுக., ரவுடி கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டது!

இந்த சம்பவத்துக்கு தலைமை தாங்கிய திமுக பிரமுகர் பரமசிவம் என்பவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி வன்முறையை நடத்தியது எஸ்.டி.பி.ஐ கட்சி (ஏப்.12).
ஆனால், இந்த நிகழ்வில் எந்த தொடர்பும் இல்லாத பாமக மீது குற்றம் சாட்டினார் திமுக வேட்பாளர் தயாநிதி (ஏப்.12).

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது பாமக தான் என்று தயாநிதி பிரச்சாரம் செய்தார். அதனை முக்கிய செய்தியாக சன் தொலைக்காட்சியும் தினகரன் நாளிதழும் வெளியிட்டன.

ஆனால், முஸ்லிம் பெண்களின் புர்காவை பிடித்து இழுத்து கலவரம் செய்த திமுகவினர் வீட்டின் மீது குண்டு வீசியதாக – டிடிவி தினகரனின் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர்களான யூனுஸ், உமர் ஆகியோரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர் (ஏப்.16).

முஸ்லிம் பெண்களை திமுக ரவுடி கும்பல் இழிவு செய்ததற்கு வன்முறை வழியில் பதிலளித்துள்ளனர் டிடிவி தினகரனின் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியினர். ஆனால், பழியை தூக்கி பாமக மீது போடுகிறது சன் நெட்வொர்க் Fake News கும்பல்!

இப்படித்தான் எந்த தொடர்புமே இல்லாமல் – எல்லாவற்றுக்கும் திருட்டு திமுக கும்பல் வெறிபிடித்த நாய் போல பாமக மீது பாய்ந்து வீழ்கிறது !

கீழே உள்ள வீடியோவில் – குண்டு வீச்சுக்கு ஆளான திமுக பிரமுகர் பரமசிவம் தலைமையிலான கும்பல் முஸ்லிம் பெண்களின் புர்க்காவை பிடித்தது தொடர்பான குற்றச்சாட்டை காணுங்கள்!

செய்தி, கருத்து: அருள் ரத்தினம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.