வாக்களிக்க தேவையான 12 ஆவணங்கள் எவை? எவை?

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

vote1 - 2026

வாக்களிக்க தேவையான 12 ஆவணங்கள் எவை என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதில் ஏதாவது ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகளால் பணிக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்க முடியும்.

புகைப்படத்துடன் கூடிய வங்கி, அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட மின்னணு அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டியும் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.