ஒரு இட்லி ரூ.20; ஒரு தோசை ரூ.100~ சதுரகிரியில் களைகட்டும் வியாபாரம்!

Published:

sathuragiri mahalingam - 2026

சதுரகிரியில் ஒரு இட்லி ரூ.20, தோசை ரூ.100 என விற்பனை  அமோகமாக நடைபெறுகிறது.

சதுரகிரியில்  மலைமேல் உள்ள  அன்னதானக் கூடங்கள்  மூடப்பட்டுள்ளதால்  அறநிலையத்துறை  அதிகாரிகளின்  நீண்டகால  திட்டமிடலின்  ஒரு பகுதியாகவும்  அறநிலையத்துறை  அதிகாரிகளின்  ஆசியுடனும்  தற்போது பக்தர்களுக்கு  மிகவும்  எளிய வகையில்  உதவி செய்து கொடுப்பதாக  இந்த  நிகழ்வு  அரங்கேறியுள்ளது … இட்லி விலை ரூபாய் 20 க்கும்  ஒரு தோசை ரூபாய் 100 க்கும் தனியார் வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுகிறது .

சதுரகிரியில் பக்தர்களின் பசியை போக்கி வந்த தனியார் அன்னதானக் கூடங்கள் நீீதிமன்றத்தின் ஆசியுடன் மூடப்பட்டுள்ளதால், கடைகளில் இட்லி ரூ.20 என்றும் தோசை ரூபாய் நூறு என்றும் விற்பனை செய்யப்படுவதாக பக்தர்கள் வேதனைை தெரிவிக்கின்றனர்

தனியார் வியாபாரிகள் சமைத்து உணவு தரும் போது அன்னதான கூடங்களுக்கு ஏன் சீல் வைப்பானேன் என்று பக்தர்கள் கூறுகின்றனர் கேள்வி எழுப்புகின்றனர் எனவே இதில் அறநிலையத்துறை அதிகாரிகளின் உள் நோக்கம் இருக்கிறது என்றும் அவர்களுக்கு வகையாக பணம் முறைகேடாக செல்கிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றனர் பக்தர்கள்

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

இதனிடையே சதுரகிரியை காப்போம் என்று சமூகவலைதளங்களில் கோஷங்கள் முன்வைக்கப்படுகின்றன

sathuragiri - 2026

#சதுரகிரி

சித்தர்கள் வாழும் மலை என நம்பபடுகிற அடர்ந்த மலை பகுதி இங்குள்ள #சுந்தரமகாலிங்கம் மற்றும் #சந்தனமகாலிங்கம் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்கள்

இங்கு வருடந்தோறும் சென்று மக்கள் வழிபாடு நடத்தி வந்தனர் சமீப வருடம் வரை பெருங்கூட்டம் வருவதை பொறுக்க முடியாத சில சக்திகள் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை காரணமாக வைத்து #வனத்துறை யை தூண்டி விட்டு கோவிலுக்கு செல்ல நிரந்தர தடை விதித்தனர்

பல கட்ட போராட்டங்களுக்கு பின் தற்போது மாதத்திற்கு 6 நாட்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி கொடுக்கின்றனர்

தற்போது அடுத்த தாக்குதலை தொடுத்துள்ளன அந்த சக்திகள் அதாவது மலைக்கு சிவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உணவு வழங்க அன்னதான கூடங்கள் துறவிகள் சன்னியாசிகள் சில நல் உள்ளங்களால் நடத்தபட்டது இதை விட்டால் அங்கு உணவிற்கு வழியே கிடையாது

அப்படி இருக்கையில் ஒரே நாளில் அரசும் அறநிலைய துறையும் சேர்ந்து அத்தனை அன்னதான கூடங்களையும் மூடச்சொல்லி உத்தரவிட்டு மூடிவிட்டனர் இதன் மூலம் சிவனை வழிபட செய்யும் பக்தர்கள் எண்ணிக்கையை குறைத்து விட முயற்சி செய்கின்றனர்

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

அரசின் இந்த போக்கை உடனே கண்டிக்க வேண்டும் அனைவரும்

#ஆண்டாள் தாயார் அவதரித்த #ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் இந்த #சிவ_பெருமானின் சதுரகிரியும் உள்ளது ஆண்டாளுக்கு கூடியதில் ஒரு பகுதியாவது நம்ம சிவனுக்கும் சித்தர்களுக்கும் கூடுவோம் ஆன்மீகத்தை காப்போம்

#நம_சிவாய

Related articles

Recent articles

spot_img