பழைய குற்றாலம் காட்டுப் பகுதியில் தீ.. ! அரிய மூலிகைகள் நாசம்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

old courtallam fire - 2026நெல்லை மாவட்டம் பழைய குற்றாலம் பகுதியில் திடீர் தீ பற்றிக் கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டுப் பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க வனத் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் போராடி வருகின்றனர்.

கோடை வெயிலின் தாக்கத்தால், மலைப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. வெயிலின் தாக்கத்தால், தண்ணீர் இன்றி காட்டுப் பகுதி காய்ந்து கிடக்கிறது. இந்நிலையில், இதன் காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பழைய குற்றாலம் வனப்பகுதியில் பச்சை மரங்களுக்கிடையே காய்ந்த சருகுகள் தீப்பிடித்து பச்சை மரங்களும் எரிந்து நாசமாகி வருகின்றன. அரிய வகை மூலிகைகள், செடிகளும் கருகி வருவதால் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.