ஹை ஹீல்ஸ் அணியாத பெண் பணியிலிருந்து நீக்கத்தால் சர்ச்சை

சற்றுமுன்

லண்டனில் ஒரு சர்வதேச நிறுவன அலுவலகத்தில் வரவேற்பாளராகப் பணியாற்றி வரும் பெண் “ஹை ஹீல்ஸ்” காலணிகளை அணிந்து வராததால் பணியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் சர்high-heelsச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ப்ரைஸ் வாட்டர் கூப்பர் ( PwC) நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருபவர் 27 வயதான, நிக்கோலா தோர்ப் . ஹேக்னி என்ற லண்டன் பகுதியைச் சேர்ந்த இவர் தனது அலுவலகத்துக்கு வந்த போது, அவர் “இரண்டு இன்ச்சிலிருந்து 4 இஞ்ச் வரை உயரமுள்ள ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணிந்து வருமாறு கூறப்பட்டாராம்.
அவ்வாறு அணிய மறுத்த நிக்கோலா , ஆண் சகாக்கள் அவ்வாறு குதிகால் உயர்ந்த செருப்புகளை அணியுமாறு வற்புறுத்தப்படுவதில்லையே என்று கூற, அவரை சம்பளமில்லாமல் வேலையிலிருந்து திருப்பி அனுப்பி விட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

1 thought on “ஹை ஹீல்ஸ் அணியாத பெண் பணியிலிருந்து நீக்கத்தால் சர்ச்சை”

  1. PWC சத்யம் கம்பெனி ஊழல் போன்ற வழக்குகளில் ஆட்டம் கண்ட ஒரு நிறுவனம். அது ஹீல்ஸ் அணிந்து வருமாறு பெண் ஊழியர்களை நிர்பந்தித்துள்ளது. தான் ஆடியது போதாது என்று வேலை செய்பவர்களையும் ஆட solkirathu.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.