அரவக்குறிச்சியில் திமுக.,வின் கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்!

சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்

karur anbazhagan - 2026

கரூர்: கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறிய போது, திமுக.,வின் கோரிக்கையை ஏற்று, வாக்கு எண்ணிக்கை வசதியான பெரிய அறையில் மாற்றப்  பட்டுள்ளது என்றார்.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  அரவக்குறிச்சி தொகுதியில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை மிக சிறியதாக உள்ளதாக பெரிய அறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்

அவர்கள் கோரிக்கையை ஏற்று தற்போது வாக்கு எண்ணிக்கை வசதியான பெரிய அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14 மேஜைகளில் மொத்தம் 18 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார் அன்பழகன்.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவரிகள் செல்போன் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் எடுத்து வரக்கூடாது அவை தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் செய்தியாளர்களிடம் பேசிய போது, 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ளது. இரண்டு கம்பெனி பாரா மிலிட்டரி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, போக்குவரத்து காவலர்கள், மற்றும் உள்ளூர் காவல் படை என 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.