நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Published:

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்றுள்ளதால் நாகை துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

Captureவங்கக் கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப் பெற்றுள்ளதாகவும் இதனால் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நூற்று கணக்கான பைபர் மற்றும் நாட்டு படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img