பெண்கள் லீக் கிரிக்கெட் அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு முகாம் இன்றும், நாளையும் சென்னையில் நடைபெற உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அளவில் 2019-20ம் ஆண்டு பெண்கள் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்காக வீராங்கனைகள் தேர்வு முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. யு16 அணிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு இன்று காலை 7 மணிக்கு நடைபெறும். வீராங்கனைகள் 1-9-2003 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
அதேபோல் யு19 அணிகளுக்கான தேர்வு முகாம் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உளளது. இதில் பங்கேற்போர் 1-9-2000 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
யு23 வீராங்கனைகள் தேர்வு நாளை காலை 7 மணிக்கு நடைபெறும். இதில் 1-9-1996 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பங்களை www.tnca.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்வதுடன், டிஎன்சிஏ அலுவலகத்திலும் வேலை நேரத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



