கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
அவசர கால சிகிச்சைப்பிரிவு வழக்கம் போல் செயல்படும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவர்கள் போராட்டத்தால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் இன்று நடைபெறும் மருத்துவர்களின் வேலைநிறுத்ததிற்கு ஆதரவாக இந்தப் போராட்டம் நடக்கிறது.



