ஒரு டஜன் மாவட்டங்களில் இன்றும் நாளையும் அனல்!

Published:

heat waves in train - 2026

இன்றும் நாளையும் அனல் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

’தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் (ஜூன் 18, 19) அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:

தென்மேற்கு பருவ மழை துவங்கிய, சில நாட்களிலேயே நின்று விட்டது. அதனால் மாநிலம் முழுவதும் அனல் காற்று வீசுகிறது.

இன்றும் நாளையும் 12 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலுார், பெரம்பலுார், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img