April 21, 2025, 7:36 PM
31.3 C
Chennai

வரி ஏய்ப்பு புகார்: சரவண பவன், அஞ்சப்பர் என 4 உணவக அலுவலகங்களில் சோதனை!

  • சரவண பவன் ஹோட்டல் நிறுவனம் வெளிநாட்டு வருவாயை மறைத்தது வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிப்பு
  • வருமானவரித்துறை சோதனைக்குள்ளாகியுள்ள ஹோட்டல் நிறுவனங்கள் வெளிநாட்டு வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு.
  • அஞ்சப்பர் நிறுவனத்திற்கும் 30க்கும் அதிகமாக கிளைகள் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன.
  • வெளிநாட்டு கிளைகளின் வருவாய்க்கு முறையாக வரி செலுத்தவில்லை என்கிறது வருமான வரித்துறை.
  • சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் ஆய்வு, நிறுவனங்களின் இயக்குநர்களிடம் விசாரணை.
  • திண்பண்டங்களை பெருமளவு ஏற்றுமதி செய்யும் கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் நிறுவனங்களும் வரி ஏய்ப்பு!

வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 உணவகங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் வெளிநாட்டு கிளைகளின் வருமானத்தை சரவணபவன் மறைத்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவிட்ஸ் (grand sweets) மற்றும் ஹாட் பிரட்ஸ் ( Hot Breads) ஆகிய உணவகங்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக விற்பனையை குறைத்துக் காட்டி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்தது.

ALSO READ:  வருமான வரி சலுகை, இளைஞர் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு... மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!

இந்தப் புகாரை அடுத்து, 4 உணவகங்கள் தொடர்பான இடங்களில், வியாழக்கிழமை இன்று காலை வருமான வரிச் சோதனை நடந்தது. சென்னை வடபழனியில் உள்ள சரவணபவன் கார்ப்பரேட் அலுவலகம், கேகே நகரில் உள்ள சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் வீடு, அவரது மனைவி மற்றும் மகன், முதன்மை செயல் அதிகாரி கணபதி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

சரவண பவன் உணவகத்திற்கு சென்னையில் 25 கிளைகள் உள்பட இந்தியாவில் 56 கிளைகள் உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அரபு நாடுகளிலும் 36 கிளைகள் உள்ளன. சரவணபவன் உணவகத்தில் வெளிநாட்டு பரிவர்த்தனை தொடர்பாக ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்ததில் வெளிநாட்டு உணவகக் கிளைகளில் இருந்து வரும் வருவாயை மறைத்து முறைக்கேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடையாறு காந்தி நகரில் உள்ள கிராண்ட் ஸ்வீட்ஸ் தலைமையகத்திலும், உரிமையாளர் நடராஜன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் 22 கிளைகளும், புதுச்சேரியில் 4 கிளைகளையும் அமைத்து இயங்கி வரும் ஹாட் பிரட்ஸ் பேக்கரியின் அடையாறு காந்தி நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். ஹாட் பிரட்ஸ் உரிமையாளர் மகாதேவனின் சென்னையில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது.

தியாகராய நகரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தின் தலைமையகத்திலும் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சிக்கியுள்ள ஆவணங்களை வருமானவரித் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கணக்கில் காட்டாத பணத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா? பணப்பரிமாற்றம் ஏதும் நடைபெறுள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை, வெள்ளிக்கிழமை மாலை வரை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக் கோரி மனு!

தமிழக அமைச்சர் பொன்முடியைக் கைது செய்ய வலியூறுத்தி, தமிழக ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக் கோரி மனு!

தமிழக அமைச்சர் பொன்முடியைக் கைது செய்ய வலியூறுத்தி, தமிழக ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

Entertainment News

Popular Categories